கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூணாச்சி மலைவாழ் கிராமத்தில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார்(13), அஜித்குமார்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார், அஜித்குமார், அதே கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 24-ஆம் தேதி இந்த மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலைவாழ் கிராம மக்கள் சிறுவர்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து 3 சிறுவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.