தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் அஜித்துடன் சேர்ந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை பார்வதி நாயர் தன்னுடைய வீட்டில் முன்னாள் ஊழியர் சுபாஷ் திருடியதாக புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சுபாஷ் பார்வதி நாயர் மற்றும் அவருடைய நண்பர்கள் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்தார். தொடர்பாக தேனாம்பேட்டை நீதிமன்றம் விசாரித்த நிலையில் நடிகை பார்வதி நாயர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் தற்போது பார்வதி நாயர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.