
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஆராயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 14 வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது பிஎம்கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளின் முக அங்கீகாரத்தை சரிபார்ப்பு போன்ற தேவைகளுக்காக புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் கேஒய்சி சரிபார்ப்பை வீட்டில் இருந்து முடித்து விடலாம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியின் மூலமாக விவசாயிகள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்வது மூலமாக மிக எளிதில் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம். இந்த வசதி விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.