மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது அதாவது மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பிஎம் கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான முதல் தவணை பணம் பிப்ரவரி 24ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது