
த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் “பஹீரா”. இப்படத்தின் முதல் டிரைலர் வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கணேசன் சேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பிறகு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் பஹீரா திரைப்படத்தின் புது டிரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த டிரைலர் வீடியோவை நடிகர் விஷால் தன் இணைய பக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பஹீரா படம் வரும் மார்ச்-3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Presenting @PDdancing master’s #Bagheera for you@Adhikravi ‘s sambavam loading, Congrats & Best wishes from team #MarkAntony 🔥https://t.co/szVgTKj6Jr
— Vishal (@VishalKOfficial) February 25, 2023