நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….!  எதிர் அணியில் இருக்கின்ற நண்பர்களுக்கு வளர்ச்சியை பற்றி பல கவலைகள் இருக்கின்றன. நான் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த தேசத்திற்கு நிராசையை  தவிர வேற எதையும் நீங்கள் தரவில்லை. எதிர்க்கட்சிகளின் பழக்க வழக்கத்தை பற்றியும்  நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

அவர்களுடைய சொந்த கணக்கே ரொம்ப மோசமாக இருக்கிறது. அவர்கள் எங்களிடத்தில் கணக்கு கேட்கிறார்கள். மாண்புமிகு சபாநாயகர் அவர்களே…  இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் சில விஷயங்களை பற்றி ஆச்சரியமான விஷயங்கள் வந்தது. அதை பற்றி நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இங்கே இருக்கின்ற எதிர்க்கட்சிகளிலே… பெரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு பேசுகின்றவர்கள் பட்டியலில் பெயரே இல்லை.

1999-இல் வாஜ்பாய் ஆட்சியின் போது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சரத்பவார் விவாதத்தை தொடங்கி வைத்தார்.  2003-இல் ஆட்டல் பிகாரி வாஜ்பாய்க்கு ஆட்சி நடந்தது. சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் விவாதத்தை தொடங்கி வைத்தார். 2018-இல் கார்கே அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் வாதத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த முறை ஆதி ரஞ்சன் சவுத்ரி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவருடைய கட்சி அவருக்கு பேசுவதற்கு சந்தர்ப்பமே கொடுக்கவில்லை.

நேற்று அமித்ஷா  அவர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டார். இது  சரியாகப்படவில்லை. சபாநாயகரின் ஒரு கருணையோடு…   நேரம் முடிந்து விட்டதும் கூட நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள்.  ஆனால் தன்னுடைய நேரத்தை எப்படி வீணடிப்பது என்பதில் அவர் திறமையானவர். எனக்கு  உங்களுடைய நினைப்பு என்ன என்பது தெரியவில்லை. தெரியவில்லை கல்கத்தாவில் இருந்து ஏதாவது தொலைபேசி வந்திருக்கும். காங்கிரஸ் பலமுறை அவரை  அவமானப்படுத்தி விட்டது.

பலமுறை அவரை அவை தலைவரை பதவியிலிருந்து எடுத்துக் விடுகின்றனர். நாங்கள் ஆதி ரஞ்சன் சவுத்ரியை பொறுத்தவரையில் எங்களுடைய மனவேதனையை தெரிவித்துக் கொள்கின்றோம்.  சபாநாயகர் அவர்களே சற்று நன்றாக.. சிரியுங்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே என பிரதமர் மோடி பேசினார்.