இந்தியாவின் நபர் ஒருவர் பழைய வேலையை விட்டுவிட்டு மற்றொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் அங்கு அவருக்கு புதிய PF அக்கவுண்ட் திறக்கப்படும். அனைத்து pf அக்கவுண்டுகளும் ஒரு யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் உடன் இணைக்கப்படும். இந்த நிலையில் EPFO நிறுவனம் பயனர்களுக்கு UAN என்ற 12 இலக்க தனித்துவமான எண்ணெய் வழங்கும் நிலையில் புதிய வேலை மாறினாலும் இந்த எண் அப்படியே இருக்கும். அனைத்து பழைய UAN எண்களை இணைப்பதன் மூலம் நீங்கள் தேவையில்லாத இழப்புகளை சரி செய்ய முடியும். புதிய நிறுவனம் UAN என்னை உருவாக்கினால் அனைத்து UAN எண்ணை இணைக்க வேண்டும். அது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் மெம்பர் சேவா போர்டல் https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் ஹோம் பேஜில் ஆன்லைன் சேவைகள் என்ற பிரிவில்  ‘One member – One EPF Account (Transfer Request)’ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் தனிப்பட்ட விவரங்களில் வரும். அங்கு உங்களுடைய தற்போதைய எம்ப்ளாயரின் EPF அக்கவுண்ட் போன்ற விவரங்களை காட்டும்.

பழைய அல்லது இதற்கு முந்தைய அக்கவுண்ட்டை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு நீங்கள் பழைய அல்லது தற்போதைய எம்ப்ளாயரிடம் இருந்து அட்டஸ்டேஷன் பெற வேண்டும்.

அவ்வாறு பெற்ற பிறகு உங்களுடைய பழைய மெம்பர் ஐடியை என்டர் செய்து  ‘Get Details’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் EPF அக்கவுண்டுகள் சம்பந்தப்பட்ட விவரங்கள் காட்டும்.

அதில் Get OTP’ ஆப்ஷனை கிளிக் செய்து  பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP வரும். பிறகு அதை சப்மிட் செய்ய வேண்டும்.

உங்களுடைய எம்ப்ளாயர் அங்கீகாரம் வழங்கிய பின் உங்களுடைய முந்தைய மற்றும் தற்போதைய EPF அக்கவுண்டுகளை EPFO பிராசஸ் செய்யப்படும்.