
இந்தியாவில் இ பி எஃப் ஓ நிறுவனத்தில் தொடங்கப்படும் பிஎப் கணக்குகளில் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் உதவும் வகையில் அவர்களுடைய சம்பளத்தில் சிறிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டி வழங்குவது மட்டுமல்லாமல் பிஎப் பைனர்களுக்கு உதவும் வகையில் பல திட்டங்களையும் விதிமுறைகளையும் EPFO அறிவித்து வருகின்றது. அதன்படி தற்போது EPFO நிறுவனத்தின் லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் திட்டத்தின் கீழ் PF பயனர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது குறைந்தது 20 வருடங்கள் பிஎஃப் பைனராக உள்ள நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு போனஸ் வழங்கப்படும். உதாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அடிப்படை சம்பளம் தரக்கூடிய ஊழியர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை எனவும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் எனவும் போனஸ் வழங்கப்படும்.
இருந்தாலும் pf பயனர்கள் 20 வயதுக்கு முன்பு ஊனமுற்றால் அவருக்கு இந்த விதி பொருந்தாது. இவர்களுக்கு ஓய்வு பெறும் போது ஊதியத்தைப் பொறுத்து கூடுதல் போனஸ் வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால் இ -நாமினேஷன் செய்வது கட்டாயம்.