இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி வருகிற ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த நவம்பர் 23, 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம் மாற்றம், ஆதார் எண்ணை இணைப்பதற்காக படிவங்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 14, 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தங்கள் மேற்கொள்ளுவது நாளை தான் கடைசி நாளாகும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்யலாம் அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 14.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வருகிற 2025 ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.