
கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது தொற்று நோய்கள் பரவுவது வழக்கம். அதைப்போல் நடபாண்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிக அளவில் தொற்று நோய்கள் பரவி உள்ளது. இதில் மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் கேரளா மாநிலத்திலுள்ள மக்கள் அதிக அளவில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி கேரளா அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கணக்கெடுப்பின்படி இந்த ஆண்டு மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1936 பேர் எலிக்காச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதத்தில் மட்டும் 24 வேர் எலி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர் எனவும் இதனால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேரளா அரசு எச்சரித்துள்ளது.