
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு தமிழகத்தில் இந்த விடியா திமுக ஆட்சி மீது கடுமையான கொந்தளிப்போடு….வெறுப்புணர்ச்சியோடு இருக்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காக இப்படிப்பட்ட நாடகத்தை அரங்கேற்று இருக்கிறார்கள்… திமுக ஆட்சி….திமுக அரசாங்கம்…
முட்டைதான் அவர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்… நாடாளுமன்றத் தேர்தல் முட்டை கொடுப்பார்கள்… நாடாளுமன்ற தேர்தலில் முட்டையை அழகாக, பரிசாக கொடுப்பார்கள். அரியலூர் மாவட்டத்தில் 10 எண்ணெய் கிணறுகளை ONGC தோண்டுவதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த மத்திய சுற்றுசூழல் துறை சொல்லி உள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி , இந்த கேள்வி திமுகவிடம் தான் கேட்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் தான் இருக்கிறார்கள். 38 நாடாளுமன்றத்தில் வைத்து இருப்பவர்கள் அவர்கள் தான். அவர்கள் தான் இதற்கு உண்டான தீர்வை காண முடியும். நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் மட்டும் தான் சொல்ல முடியும். இதை தடுத்து நிறுத்தும் நிலையில் இருப்பது திமுக அரசாங்கமும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தான். ஏற்கனவே இப்படிப்பட்ட மீத்தேன், ஈத்தேன் கொண்டு வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு முன்னிலை வகித்தவர் திரு ஸ்டாலின்.
அவர் முன்னிலையில் தான் அன்றைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் பொண்ட்டார்கள். அதனால் தான் இதற்கு ஒரு பெரிய பிரச்சினை வந்தது. இதை அண்ணா திமுக அரசாங்கம் இருக்கும் பொழுது…. மாண்புமிகு அம்மா அரசாங்கம் இருக்கும் பொழுது…. அங்கு இருக்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்ட பகுதிகளில் இதை கொண்டுவர கூடாது. வேளாண் மண்டலம் என பாதுகாக்கப்பட்ட நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். இதெல்லாம் அண்ணா திமுக ஆட்சி செய்தது. ஆனால் கொண்டு வந்தது எல்லாம் திமுக. அது எல்லாம் தடுத்து நிறுத்தி ரத்து செய்வது எல்லாம் அதிமுக அரசு தான் என தெரிவித்தார்.