
நடப்பு ஆண்டு பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் எனும் சிறப்புத் திட்டத்தை மோடி அரசானது தொடங்கியுள்ளது. இவை 7.5% வட்டியை தருதோடு கூட்டு வட்டியையும் பெறுகிறது. 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் எனும் திட்டத்தை அறிவித்தார். இது பெண்களுக்குரிய சிறந்த சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நல்ல வருமானத்தோடு கூட்டு வட்டியின் பலனும் கிடைக்கிறது.
ஒரு பெண் முதலீட்டாளர் இத்திட்டத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், 2 வருடங்களுக்கு பிறகு அவருக்கு 32 ஆயிரத்து 44 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதில் குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதன்பின் ரூ.100 மடங்குகளில் முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சம் ஆகும். இத்திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2025 மார்ச் 31-ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம். ஒரு பெண்ணின் பெயரில் 1-க்கும் அதிகமான கணக்குகளானது இருக்கலாம். இருப்பினும் 2 கணக்குகளை திறப்பதற்கு இடையில் குறைந்தது 3 மாத இடைவெளி அவசியம் ஆகும்.