கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த தகவலை அடிப்படையாக கொண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, ஷானித் என்பவரை சந்தேகத்திற்குரிய நபராக அடையாளம் காணவும், அவரிடம் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருள்கள் இருக்கலாம் என சந்தேகிக்கவும் செய்தனர். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.

இதற்கிடையில், தன்னை போலீசார் கைது செய்வதை தவிர்க்க, ஷானித் தன்னிடம் இருந்த போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கினார். உடனடியாக, அவரது உடலில் அந்தப் போதைப்பொருள் தாக்கம் செய்ததால், சில நிமிடங்களுக்குள் அவர் மயக்கமடைந்தார். இதில் அவதிப்பட்ட ஷானித்தை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத்துவர்களின் முயற்சி பலனின்றி ஷானித் உயிரிழந்தார். இந்த சம்பவம் சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.