ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சுற்றுலா தளமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை எதிர்த்து இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடந்த 22 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று கால அவகாசம் கொடுத்திருந்தது. தற்போது மாநில அரசுகள் தன் நாட்டில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதைத்தொடர்த்து வங்கதேசம், நைஜீரியா,இலங்கை போன்ற நாடுகளில் இருந்து விசா முடிந்த பாகிஸ்தான் மக்கள் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களை உடனடியாக வெளியேற்றும் படி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டிஜிபி போன்ற பல காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.