ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலாபயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முதலில் ரத்து செய்தது. அதோடு பாகிஸ்தான் நாட்டு மக்களை நாடு திரும்பும் படி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது  பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மஹிரா கான், ஹனியா அமீர், பிலால் அப்பாஸ், இம்ரான் அப்பாஸ், அலி ஜாபர்,சஜல் அலி, சனம் சையத் ஆகிய பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சோயத் அக்பர் என்பவரின் யூடியூப் சேனல் உள்பட 16 யூடியூப் சேனல்களை ஏற்கனவே மத்திய அரசு  முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.