
தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் பால் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் மற்றும் உபபொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு OPS கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.