அமெரிக்காவில் பாலிவுட் நடிகரான ஹிருத்திக்  ரோஷனின் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்து பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த டேனிஷ் கனேரியா என்பவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள தீவிரவாத மற்றும் கலீஸ்தானி அமைப்புகளை சேர்ந்தவர்களால் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும், அங்கு பீப் பார்ட்டி நடைபெற்றதுடன் மட்டுமல்லாமல் இந்து கடவுள்கள் குறித்து அவமதித்து பேசியதாகவும் குற்றம் சாட்டினார். அதோடு பாடகர் ஷான் இந்த குழுவுடன் அடுத்த மாதம் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

எனவே இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனேரியா வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் ரோஷன் மற்றும் ஷானின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகார பூர்வ பதிலும் வெளியாகவில்லை.