
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7-ம் தேதி மதுரை வந்தார். அங்கு மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த அமித்ஷா, அதன் பிறகு பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 24 மையக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய அமித்ஷா பாஜக வலுவாக உள்ள 50 சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளை கேட்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் விரைவில் அதனை எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுக் கொள்வார் என நம்புவதாக அமித்ஷா கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.