
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் படப் பிடிப்பிற்காக கேரளாவிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த அவர் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள். போரை பொறுமையுடனும் அமைதியுடனும் திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.