திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் களத்தில் நம்முடைய வெற்றியை உறுதி செய்யும் விதமாக வாக்கு சாவடி பொறுப்பாளர் கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருச்சி, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற கூட்டத்தில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக முதல்வர் கழக தலைவர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

இன்றைய கூட்டத்தில் நமது முதலமைச்சர் அவர்களால்…  கழக தலைவரால் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழல். நம் தலைவர் அவர்கள் இங்கு வரவில்லை. ஆனால் உங்களுக்கு தெரியும் அவருடைய நினைவு முழுவதும் இந்த கூட்டத்தில் தான் இருக்கும். இன்னும் சொல்ல போனால் தொலைக்காட்சியில் நேரடியாக இந்த கூட்டத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும்,  என்னை அழைத்து நீ போய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய வந்துவிடு என்று என்னை அனுப்பி வைத்திருக்கிறார்  நம்முடைய கழக தலைவர் அவர்கள்.. வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தை ஒரு மாநாடு போல நடத்திட முடியும் என்றால் இந்தியாவிலேயே ஒரே இயக்கம் நம்முடைய திராவிட கழகம் தான் முன்னேற்ற கழகம் தான். அதற்கு இங்கு நடைபெறக்கூடிய இந்த கூட்டமே ஒரு சாட்சி.

இங்குள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வெள்ளம் போல திரண்டு இருக்கிறீர்கள். அதேபோல அரங்கிற்கு   வெளியேயும்  தொண்டர்கள் கடல் போல் கூடி இருக்கிறார்கள். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்வதில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் திரு.இராணிப்பேட்டை காந்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் ராணிப்பேட்டை காந்தி அவர்களைப் பொறுத்தவரை தலைவர் சொல்வதை…. தலைமை சொல்வதை… எந்த பணியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர் தான் அண்ணன் காந்தி அவர்கள்…  மேலும் இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவள்ளூர் மாவட்ட கழகத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்  தெரிவித்தார்.

இதற்கு முன்பு உரை ஆற்றிய கழக மூத்த வழக்கறிஞர் NR இளங்கோவன் அவர்களும்,  அமைச்சர் தாமு அன்பரசன் அவர்களும்,  அண்ணன் லெனின் அவர்களும்,  மக்களவை உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன் அக்கா அவர்களும், இயக்குனர் சகோதரர் பழ. கரு பழனியப்பன் அவர்களும் இங்கே பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பேசியது எல்லாம் நீங்கள் உள்வாங்கி இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்,  அவர்களுக்கும் என்னுடைய அன்பும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.