
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் பல போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 2 கேள்விகளுக்கு பதில் வேண்டும் ஒன்று இந்த வழக்கை ஹை கோர்ட் விசாரணைக்கு அனுப்புவதா?, மனுதாரர்கள் எந்தவிதமான வாதங்களை முன் வைக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த சட்டத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் மனுவின் முக்கிய சாராம்சங்களை வாதங்களாக முன் வைத்தனர்.
அப்போது நீதிபதி, வக்பு சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?. அறநிலைத்துறை சட்டத்தின் படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துக்களை பதிவு செய்யும் நடைமுறை கிடையாது. இதைக் கேட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் கூறியதாவது விரைவாக கருத்து கேட்ட பிறகு தான் சட்டம் இயக்கப்பட்டது.
வக்கு என்று பதிவு செய்யப்பட்டிருந்தால் அது செல்லும், இல்லை என்றால் அது வக்பு சொத்தாக பயன்படுத்த முடியாது இதைத்தொடர்ந்து நீதிபதி கூறியதாவது திருப்பதி தேவஸ்தானம் தேவசம் போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் இல்லாதவர்கள் உள்ளனரா? வக்புச்சோத்தை மாவட்ட கலெக்டர் முடிவு செய்வது நியாயமா? இதில் மட்டும் ஏன் புதிய நடவடிக்கை என்று கேள்வி எழுப்பினார். எனவே இந்த சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த சட்ட வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோர்ட் அறிவித்தது. அதன்படி இன்று மதியம் 2:00 மணிக்கு விசாரணை நடைபெறும் என்றும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.