
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் நாம் 79 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து 250 ரன்கள் இலக்கு வைத்து களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 45.3 ஓவர்களில் 25 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13வது முறை டாஸில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து அதிக டாஸை தோற்ற இந்திய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது. மேலும் இந்தியா கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து 10வது டாஸ் தோல்வியை சந்தித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோல்விகளை சந்தித்த 3-வது கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.