முன்னதாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களுக்கு மட்டும்தான் மாரடைப்பு வந்தது. ஆனால் தற்போது, சிறு வயதில் உள்ளவர்களுக்கும் கூட மாரடைப்பு வருகிறது. இவை அனைத்தும் கொரோனா பரவலுக்குப் பிறகுதான் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இதயத்தை பாதுகாப்பது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுவதாக, ஒருவர் வேலை காரணமாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதுபோன்று ஒரே இடத்தில் இடைவெளியின்றி அமர்ந்திருப்பது தான் இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் இதிலிருந்து தப்ப முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு மனிதருக்கு உடல் அசைவுகள் மிகவும் முக்கியம் என்றும், குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது எழுந்து நடப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர்.