ரஷ்ய நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சைபீரியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்த இளம் பெண்ணுக்கு 22 வயது ஆகும் நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 18-வது மாடியில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி அந்த இளம் பெண் ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் புல் தரையில் விழுந்த நிலையில் சற்று நிதானமாக அவர் எழுந்து நின்றார்.

இதைப் பார்த்து அங்கிருந்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்த விபத்தில் அவருக்கு எலும்பு முறிவு கூட ஏற்படவில்லை. இருப்பினும் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் 18-வது மாடியில் இருந்து கீழே குதித்தும் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு உட்பட எந்த ஒரு காயங்களும் ஏற்படாமல் உயிர்ப்பிழைத்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.