மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் டும்புவாலி பகுதி உள்ளது. இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 13 வது மாடியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த வாரம் 13-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது. அப்போது அந்தப் பகுதியில் பவேஷ் ஹெத்ரா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் குழந்தை மாடியில் இருந்து கீழே விழுவதை பார்த்த நிலையில் உடனடியாக தன்னுடைய இரு கைகளாலும் குழந்தையைப் பிடித்துக் கொண்டார்.

குழந்தை முதலில் அவருடைய கையில் விழுந்து பின்னர் கீழே விழுந்தது. இதனால் குழந்தைக்கு லேசான காயங்களே  ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் அந்த நபரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.