
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் டாம் ஹாலண்ட். இவர் ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ஒரு பேட்டியில் தனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நடிப்பிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவேன் என்று அறிவித்துள்ளார். அதாவது குடும்ப வாழ்க்கை என்று வந்த பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக நடிப்புக்கு பிரேக் விடுவதாக அறிவித்துள்ளார்.
இவர் ஹாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் ஸெண்டாயாவுடன் தீவிரமான டேட்டிங்கில் இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் திருமணம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. மேலும் இந்த நிலையில் குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவதற்காக நடிக்க மாட்டேன் என்று டாம் கூறியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.