
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் செட்டி தோட்டத்தில் மாதவி என்பவர் நடைபாதையோரம் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாதவி என்.டி.ஆர் மேம்பாலத்தில் உள்ள சர்வீஸ் சாலையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மாதவி மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த குட்டு புத்தின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.