
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
குறிப்பாக பாளையங்கோட்டை ஞானானந்தர் தெருவில் வசிக்கும் வயதான தம்பதிகளின் வீடு சேதமடைந்துள்ளது. அவர்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வயதான தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.