கர்நாடக மாநிலத்தில் ஒருவர் ola ஸ்கூட்டர் ஷோரூமை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலபுர்கி நகரில் ஒரு ஓலா ஷோரூம் அமைந்துள்ளது. இங்கிருந்து முகமது நதீம் (26) என்ற வாலிபர் ஒரு ஓலா ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். இவர் ஒரு பைக் மெக்கானிக் ஆவார். இவர் கடந்த மாதம் சுமார் 1.4 லட்ச ரூபாய்க்கு புதிய ஸ்கூட்டர் வாங்கிய நிலையில் ஓரிரு நாட்களில் ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டது. இதனால் அவர் பலமுறை தன்னுடைய வாகனத்தை ரிப்பேர் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த ஷோரூமின் கஸ்டமர் சர்வீஸ் ஊழியர்களுக்கு பலமுறை தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் அவர்களிடம் சென்று அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முகமது அந்த ஷோரூமுக்கு பெட்ரோல் கேனுடன் சென்றார். பின்னர் அந்த ஷோரூம் மையத்தை வைத்து கொளுத்தி விட்டார். இதில் அங்கிருந்த 6 ஸ்கூட்டர்கள் மற்றும் கணினி பல விளைவு இருந்த பொருள்கள் எரிந்து சாம்பல் ஆகியது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமதுவை கைது செய்துள்ளனர். மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் அதனை தீ வைத்து கொளுத்திய சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஷோரூமையை கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.