டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரி தான் அனம் மிர்சா. இவர் Google Pay போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையால் தனது செலவுகள் அதிகரித்து உள்ளதாக கூறி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார். எனவே செலவுகளை கட்டுப்படுத்த தனது மொபைலில் உள்ள அனைத்து யுபிஐ செயலிகளையும் அவர் நீக்கியதாக தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Anam Mirza (@anammirzaaa)

இதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும் என்றும் கூறுகிறார். சிறு மாற்றங்கள் பெரிய தாக்கம் என்ற தலைப்பில் இந்த ஆண்டு நான் Google Pay பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உடனடி பணப்  பரிவர்த்தனை வசதி திட்டமிடப்படாத செலவுகளை ஊக்குவிக்கிறது என்பதால் அதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். ஆன்லைன் பரிவர்த்தனைகளை நிறுத்தி விட்டதால் ஆரம்பத்தில் நண்பர்களிடம் காபி போன்ற சிறு விஷயங்களுக்காக பணம் கேட்க வேண்டிய நிலைமை இருந்தது.

இது அன்றாட வாழ்க்கையை சற்று கடினமாக மாற்றியது. இருப்பினும் நாளடைவில் அதற்கு பழகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனம் மிர்சாவின் இந்த செயல் டிஜிட்டல் பணம் செலுத்தும் பழக்கவழக்கங்கள் மற்றும் நிதி வேளாண்மை குறித்த விஷயங்களை தூண்டியுள்ளது. சிலர் இதை பாராட்டினாலும், சிலர் கவலையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.