
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு DMKவை பொருத்தவரை பொய்களை சொல்லி மட்டும் தான் ஆட்சியில் இருக்க வேண்டும். பொய்யான ஒரு கட்டமைப்பை வைத்து மட்டும்தான் 2024 தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய முடிவில் இருக்காங்க. அப்போ உங்களுடைய பெரிய வேலை…. நாம ரெண்டு விஷயத்தை பேசிட்டோம். ஆல் இந்தியாவுல பேசி இருக்கோம். அடுத்து நாம எதற்காக சென்னைக்கு வரவேண்டும் என்பதை பேசு இருக்கின்றோம்.
அதிலும் தென் சென்னை எதற்காக வெற்றி பெற வேண்டும் ? என்று பேசி இருக்கின்றோம். மூன்றாவது பார்த்தீர்கள் என்றால், திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை ஒரு மாயை உருவாக்குவார்கள். ஜனவரியில் இன்வெஸ்டர்ஸ் குளோபல் மீட் என்ற ஒன்றை வச்சாங்க. எல்லாத்தையும் கூப்பிட்டாங்க…. கையெழுத்து எல்லாம் போட்டாங்க….
ஜனவரியில் இது முடிஞ்சது… ஜனவரி 19இல் கேலோ ஸ்போர்ட்ஸ் என்று ஒன்று நடத்துவோம்…. உதயநிதி ஸ்டாலினை மறுபடியும் புரோஜெக்ட் பண்ணுவோம். ஜனவரி 19இல் அது நடக்க போகுது. டிஎம்கேவை பொருத்தவரை ஒரு சினிமா கம்பெனி, டிராமா கம்பெனி எப்படி ஆட்சி நடத்துவார்களோ, அதே போல தான். ஒரு ஈவென்ட் நடத்தினால்,
கூட அதுக்கு ஒரு பாட்டு வேணும். அவ்வளவு பெரிய குளோபல் இன்வெஸ்ட்டர்ஸ் மீட்ல உலகம் முழுவதுமே நடத்தக்கூடிய மீட்….. இந்தியா முழுவதும் நடக்குது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஓ மாமா வரியா….ஊ மாமா வரியா….. ன்னு பாட்டு போடுவாங்க…. வேற எங்கேயும் பாட்டு போட மாட்டாங்க. இவ்வளவு அற்புதமான மிருதங்கம் இருக்கு, நாதஸ்வரம் இருக்கு, வைலின் இருக்கு, கிராமிய கலைகள் இருக்கு….. 2000 ஆண்டுகள் பழமையான கிராமிய கலைகள் தமிழகத்தில் இருக்கு…. அவர்களை கொண்டு வந்து மேடையில் எல்லா மக்களும்…. உலகத்தில் இருந்து வந்து இருக்ககூடிய எல்லா மக்களும் பாருங்க என விமர்சனம் செய்தார்.