
அமெரிக்காவின் புளோரிடாவில் பதிவானதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியில், ஆற்றின் நடுவில் ஒரு நபர், மிக ஆபத்தான விலங்கான முதலையுடன் நடனமாடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது உண்மையா?” என்ற சந்தேகத்துடன் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
View this post on Instagram
அந்த வீடியோவில், அந்த நபர் ஆற்றில் நின்றபடியே அருகில் வரும் முதலையை கையில் தூக்கிக்கொண்டு அப்படியே நடனமாடுகிறார். முதலையும் அந்த நபருடன் நெருக்கமாக பழகி, அன்பாக காணப்படுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது நடனமும், நடிப்பும், காதலர் ஜோடிகளுக்கு இணையாகவே தெரிகிறது என பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். “முதலைக்கும் மனிதருக்கும் இதுவரை கண்டிராத வேதியம்,” “அது உண்மையா” என பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்த வீடியோ மே 12 அன்று @fishing.tribe என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இதுவரை 3.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். கருத்துப் பகுதியில் பல நகைச்சுவை கருத்துகள் இடம் பெற்றுள்ளன. “இப்படி ஒரு காட்சி புளோரிடா மாதிரியான இடத்தில்தான் நடக்கும்!” என ஒருவர் பதிவிட்டுள்ளாா். “முதலைக்கே சந்தேகம் வந்திருக்கும் போல இருக்கு – நான் உண்மையாவே காதலிக்கப்படுகிறேனா?” என நகைச்சுவையுடன் இன்னொருவர் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அனைவரிடையும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தகவல் குறிப்பிடுவது போல, இந்த வீடியோவில் காட்டப்படும் சம்பவத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், முதலையுடன் நடனமாடும் மனிதரின் இந்த விசித்திரமான நடத்தை, பலருக்குமான ஆச்சரியத்தை கிளப்பி வைத்திருப்பது மட்டும் உறுதி!