பாடலாசிரியர் சினேகனும், நடிகை கன்னிகா ரவியும் காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 2021 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை நடிகர் கமலஹாசன் நடத்தி வைத்தார். இதைதொடர்ந்து கன்னிகா கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், அவர்களுக்கு கடந்த 25 ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இதுகுறித்து சினேகன் தனது சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இறைவா நீ ஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிபாய் நிறைவேறியது, தாயே எந்தன் மகளாகவும், மகளே எங்கள் தாயாகவும் இரு தேவதைகள் 21ம் தேதி அன்று நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.