பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது இன்று நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானின் இன்னிங்ஸ் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே, ஷார்ட் கவர் பகுதியிலிருந்து வீசப்பட்ட பந்து, ஹெல்மெட்டில் இருந்து வழுக்கி நேரடியாக முகத்தில் விழுந்தது. இதில் பலத்த காயம்  அடைந்த நிலையில் தரையில் விழுந்தார். உடனே அணியின் ஃபிஸியோதெரபிஸ்ட்  வந்து சிகிச்சை அளித்தார். பின்னர் மருத்துவ வண்டியில் அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.

 


இதையடுத்து, இமாம்-உல்-ஹக் மயக்கம் (concussion) தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் இடமாற்றப்பட, உஸ்மான் கான் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டார். போட்டி ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின்படி, முகம் மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இமாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் காயமடைந்த போது 7 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தான் அணியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.