இத்தாலியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கைதிகளுக்கான பாலியல் அறை செயல்பாட்டுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய உம்பிரியா பகுதியில் உள்ள ஒரு சிறை கைதி தனது பெண் துணையை தனிமையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு  வெளியிடப்பட்ட தீர்ப்பில் நீதிமன்றம் கூறியதாவது, சிறைக் கைதிகள் தங்களது வாழ்க்கை துணையுடனோ அல்லது நீண்டகால காதலர்களுடனும் தனிப்பட்ட சந்திப்புகளுக்கு உரிமை அளிக்க வேண்டும் என்றும், அந்த சந்திப்பின்போது சிறைகாவலர்கள் யாரும் அவர்களை கண்காணிக்க கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஏற்கனவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் திருமண சந்திப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாலியல் அறை அறிவிப்பு பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிற நாடுகளும் ஏற்கனவே உள்ளன.

இந்த அறிவிப்பில், நெருக்கமான சந்திப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட கைதிகளுக்கு இரண்டு மணி நேரம் வரை படுக்கை மற்றும் கழிப்பறை வசதி கொண்ட அறைகள். அறையின் கதவு திறக்கப்படாமல் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் சிறை காவலர்கள் தலையிட அனுமதி அளிக்கப்படும் என்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக நீதிமன்றம் கூறியதாவது, ஐரோப்பாவிலேயே மிக மோசமான கூட்டம் நெரிசல் உள்ள சிறைச்சாலைகளில் இத்தாலியின் சிறைச்சாலைகளும் ஒன்றாகும். மேலும் சமீப காலங்களாக சிறையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாலும், அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் நாட்டில் 62,000 மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இது சிறைச்சாலைகளின் கொள்ளளவை விட 21% அதிகமாகும். எனவே சிறை கைதிகளின் மனநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.