
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தில் புதிய மாற்றங்கள் செய்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தற்போதைய இந்திய பொருளாதர நிலைமைகளை மதிப்பீடு செய்து பொருளாதாரத்தை சீராக்க ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
அதன்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி 6% இருந்து 5.50% குறைத்துள்ளது. இதனால் குறைந்த வட்டிக்கு கடன்கள் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வீடு, வாகனம் மற்றும் தனி நபருக்கான கடன்களின் வட்டி விகிதமும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.