
முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் ராஜு மதுரையில் நடந்த அஇஅதிமுக மாநாட்டில் பேசிய போது, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு. 1973 5ஆம் தேதி ஜனவரி மாதம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார். இதே திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். வந்த புகைவண்டி 10 மணி நேரம் காலதாமதம். ஆனால் மகாத்மா காந்தி வரும்போது 6 மணி நேரம் தான் தாமதம்.
அதே மாதிரி நம் தலைவர் புரட்சித்தலைவர் 16 லட்சம் தொண்டர்களைக் கொண்டு திமுகவை வனவாசம் போக வைத்தார் நம் தாய், தங்கத் தலைவி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள்… நம்முடைய தலைமைக் கழகச் செயலாளர், கொங்கு மண்டலத்தின் உடைய சிங்கமாக விளங்குகின்ற ”கொங்கு தளபதி” அருமை தம்பி வேலுமணி அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் குலுங்கியது, மதுரை திணறியது.
2010ல் நடந்த ஆர்ப்பாட்டத்தால் திமுகவை பத்து ஆண்டுகள் வனவாசம் போக வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா. திமுக என்ற தீய சக்தியை தமிழகத்தில் இருந்து விரட்டினார் அம்மா. ஒன்றரை கோடி தொண்டர்கள் இன்றைக்கு 2023 இரண்டு கோடியே 44 லட்சம் தொண்டர்கள். இதே மதுரையில் அண்ணன் வீர உரை நிகழ்த்த இருக்கிறார் என தெரிவித்தார்.