
திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மகேஷை நான் என்னமோன்னு நினைச்சேன். எதையும் சாதிக்கிற திறமை இருக்கு. ஆனால் எதுவும் இருக்கிற மாதிரி இல்லாம நடிக்கிற திறமையும் இருக்கு… சட்டமன்றத்தில் பதில் சொல்வது என்பது லேசான காரியம் அல்ல. எவ்வளவு பெரிய பேச்சாளராக இருந்தாலும் சரி…. சட்டமன்றத்துல தலைவர் அவர்களேன்னு கூப்பிட்ட உடனே இவன் ஆடிடுவான்… ஏனென்றால் எதிரிலிருந்து கேள்வி பல வரும்.
முதல்வர் அவர்கள் மானிய கோரிக்கையி பதில் சொல்லணும்… 10, 15 பேர் பேசிட்டு இருப்பாங்க… இத்தனை பேருக்கு பதில் சொல்லணும். அடுத்து என்ன செய்யப் போறோம் ? அப்படின்னு சொல்லணும்…. பள்ளி கல்வித்துறையில் நிறைய விவகாரங்கள் இருக்கும்… ஆசிரியர்கள்.. . பள்ளிக்கூடங்கள்…. அது இது என்று ஏராளமா இருக்கும்….. நச்சு புடிச்ச விவகாரங்கள்… ஆனால் அவர் பதில் சொன்ன அன்னைக்கு நான் பார்த்தேன்…
சும்மா சொல்லக்கூடாது….. மற்றவர்கள் எல்லாம் பதிலை எழுதி எடுத்துட்டு வந்துருபாங்க… ரிப்ளைய ஒரு ஆள வச்சி… அங்கேயே மாண்புமிகு பேரவை தலைவரே என்பதில் இருந்து எழுதி வச்சுட்டு வந்துருவாங்க.. படிச்சிட்டு போயிருவான்… அவன் பேசுனது அவனோடு போச்சு…. இவன் பேசுனது இவனோட போச்சு.
உட்கார்ந்திருக்கோம் பாத்தீங்க… எங்க தல விதி ரெண்டத்தையும் கேட்டுட்டு உட்கார்ந்து இருக்கோம்…. ஆனால் கையில எந்த ஒரு பேப்பருமே இல்லாமல், அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்கு அடிச்சாரு… கையில எந்த பேப்பர்ருமே தொடல…. அவர் பாட்டுக்கு மளமளவென அடிச்சாரு. நான் பெருமைக்காக சொல்லல…. இதற்கு முன்னால் சபையில நான் தான் அப்படி பேசுவேன்…. எந்த கேள்வியாக இருந்தாலும் சரி, நான் பதில் சொல்லுவேன். PTR பழனிவேல் ராஜன் சொல்லுவாரு… அற்புதமாக நேரிலே புகழ்வார்கள் என தெரிவித்தார்.