
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உடைய தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பலரும் சென்னையில் பெரும் வெள்ளத்தை குறிப்பிட்டு, 4000 கோடி ரூபாய் என்ன ஆச்சு ? ஏன் சென்னையில் இவ்வளவு தண்ணீர் என கேட்டிருந்தனர். இந்த நிலையில் தான் அமைச்சர் KN நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
4000 கோடி அல்ல. 5,166 கோடி ரூபாயில் ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன என தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இன்னும் 3000 கோடி பணிகள் நடைபெறவில்லை என்று தெரிகிறது.
நேற்றைக்கு தலைமைச் செயலாளர் மத்திய அரசு சென்னை வெள்ளநீர் பாதிப்பு வடிகால் கட்டமைப்புக்கு கூடுதலாக 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாகவும், அதற்கான ஒப்புதல் நேற்று கிடைத்திருப்பதாகவும் கூறினார். எனவே வரக்கூடிய காலங்களில் இன்னமும் அதிகப்படியான பணிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலமாக அடுத்த பருவமழையின் போதாவது சென்னையில் நீர் தேங்காமல் இருக்கிறதா ? என்பதைபார்க்க வேண்டும்.எனவே புதிய வடிகால் அமைப்புகளை அரசு ஏற்படுத்தும் என புரிந்து கொள்ள முடிகிறது. திமுக கட்சியினுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
4000 கோடி ரூபாய் அல்ல!
"மழைநீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு ரூ 5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன."
– நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் திரு @KN_NEHRU அவர்கள். pic.twitter.com/duj3BcUQV3
— DMK (@arivalayam) December 8, 2023