உலகம் முழுவதும் பலரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மொத்தத்தில், சாட் ஜிபிடி ஒரு முன்னணி பயன்பாடாக விளங்குகிறது. பதில்கள் உருவாக்கம், பைல் தயார் செய்தல், கோடிங் மற்றும் தகவல் தேடல் என ஏராளமான காரியங்களில் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள், பணியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என பலரும் இதனை நம்பிக்கையோடு பயன்படுத்தி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 90 சதவீத மாணவர்கள், கல்வி தொடர்பான பணிகளில் சாட் ஜிபிடியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இது உலகளவில் இப்படியான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான பற்றை காட்டுகிறது.

இந்நிலையில், சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மன் ஒரு முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சாட் ஜிபிடியை மக்கள் மிக அதிகமாக நம்புகிறார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை வழங்காமல் இருக்காது. இது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். இதனை நாம் முழுமையாக நம்ப வேண்டியதாகவே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டியது போல், சாட் ஜிபிடியையும் அதே வகையில் அணுக வேண்டும். இது ஒரு ஆதாரமாக இருக்கலாம், ஆனால் உண்மையை உறுதி செய்யும் கருவியாக மட்டும் பார்க்கக் கூடாது” என சாம் ஆல்ட்மன் கேட்டுக்கொண்டார்.

இச்சமயம், அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு இடமாகியுள்ளது. மக்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது கட்டுபாடற்ற நம்பிக்கையை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை, தொழில்நுட்பத்தை உருவாக்கியவரின் வாயிலாகவே வெளிவருவது, பெரும் முக்கியத்துவம் பெற்றதாகும்.