
எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இருப்பவர் ஜாக் டோர்சி. இவர் “பிட்சாட்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஆஃப்லைன் மெசேஜ் ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். இது உலகம் முழுவதும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பில் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றுவதே இந்த பயன்பாட்டின் பின்னணியில் உள்ள முக்கிய யோசனையாகும்.
இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சங்கிலி தொடர்பாக பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்களின் மொபைல் தரவு, சிம் கார்டுகள் அல்லது வைஃபை எதுவும் இல்லாமல் நம்மால் எளிதில் குறுஞ்செய்திகளை அனுப்ப உதவுகிறது.