
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் அப்பா மிகப்பெரிய நடிகர். உலகமகா நடிகர்கள் குடும்பம் தான் இது. அந்த உலக மகா நடிகர்கள் குடும்பத்துக்கு சொல்லத் தேவையில்லை. இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் தமிழன் அழிக்கப்பட்டபோது முதலை கண்ணீர் வடித்தார்கள். தமிழ்நாடு கண்டுகிச்சா… ஒன்னும் கண்டுக்கல. 2011ல அதுக்குரிய தண்டனை அந்த கட்சிக்கு கொடுத்தாங்க. ஆட்சிக்கு வரல.
அதேபோல பார்த்தீங்கன்னா… போட்டோ சூட் நடத்தி, இப்ப ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். எப்படி எல்லாம் நடிச்சிட்டு இருக்காருன்னு உங்களுக்கு நிச்சயமா தெரியும். இவரு கிளிசரின் கொண்டு போகலான்னு நினைக்கிறேன். யாரு உதயநிதி ? ஏன்னா கண்ணுல தண்ணி வந்த மாதிரி தெரியல. என்ன ஆக்டிங் பா.. ஒரு சொட்டு தண்ணி கூட வரல. ஒரு கண்ணீர் வடிக்கிறனா…. ஒரு ஆட்சிக்கு லாயிக்கே இல்லல்ல நீங்க.
ஆட்சி நடத்த திறமை இல்லை. ஒரு வக்கில்ல, துப்பு இல்ல, ஒரு துப்பு கெட்ட ஆட்சி, இது ஒரு வக்கில்லாத ஆட்சி. அப்படி நீங்க நடத்திட்டு இன்னைக்கு போய் கண்ணீர் வடிக்குறீங்க அப்படின்னா… தமிழ்நாட்டு மக்கள் நம்புவாங்களா ? அதுவும் வராத கண்ணீர். முதல கண்ணீர் தண்ணியில விட்டா… அது தெரியுமா ? தெரியாது. வராத கண்ணீர். அப்படியே வந்து அழுகிற மாதிரி ஆக்ஷன் போட்டா கூட… அசிங்கமா இல்லையா ? உங்களுக்கு என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.