
டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வந்தது போல் நடித்து மருத்துவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் நர்சின் கணவர் தனது மகளே திருமணம் செய்து தருவேன் என உறுதியளித்து சிறுவனை டாக்டரே கொலை செய்ய வேண்டும் என்று தூண்டியிருக்கிறார்.
நிமா மருத்துவமனையில், டாக்டர் ஜாவேத் அக்தர் பணியில் இருந்தபோது, இரண்டு சிறுவர்கள் சிகிச்சை பெற வந்தனர். ஒருவன் மருத்துவமனைக்கு சிகிச்சை என்ற பெயரில் வந்த நிலையில், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் டாக்டரை சுட்டுக்கொன்றான். இச்சம்பவம் மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், நர்சின் கணவர் தான் இந்த கொலைக்குத் திட்டம் தீட்டியவர் என்று தெரியவந்தது. தனது சந்தேகத்தின் காரணமாக இவ்வாறு கொலை நிகழ்த்தியதாக தெரிகிறது.
மேலும், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வாங்கப்பட்டதாக சிறுவன் ஒப்புக்கொண்டான். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.