பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மது விற்பனை செய்த அய்யனார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அதோடு அவரிடமிருந்த 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அய்யனாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.