சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு கொடுத்துவிட்டு பின்னர் அவரது வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவு கொடுத்துவிட்டு கலைச்செல்வி தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது தாய் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
இதைப் பார்த்து பதறிப்போன கலைச்செல்வி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மின் சுவிட்சை ஆன் செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் தீப்பிடித்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.