தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் மேற்கொண்ட கிழக்கு மேற்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தனது ஜியு-ஜிட்சு திறன்களை காட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் காந்தி குழந்தைகளுடன் தற்காப்பு கலை வகுப்புகளை நடத்துகிறார். அவர் ஐகிடோவில் கருப்பு பெல்ட் மற்றும் ஜியு-ஜிட்சுவில் நீல பெல்டும் வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இளம் பங்கேற்பாளர்களுக்கு தற்காப்பு கலைகளை விளக்குகிறார். ‘டோஜோ’ என்ற சொல் ஒரு பயிற்சி கூடம் அல்லது தற்காப்பு கலை பள்ளியை குறிக்கிறது.

நீதிக்கான பாரத் ஜோடோ யாத்ராவின் போது எங்கள் முகாமில் ஜியு-ஜிட்சு எங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்த கலையின் மூலம் இளைஞர்களின் விழிப்புணர்வு, அகிம்சை, தற்காப்பு மற்றும் அவர்களின் வலிமையை விளக்க முயற்சித்தோம்.

நீங்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் அது உங்களை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வலிமையாக்குகிறது. அனைவருக்கும் தேசிய தின விழா நல்வாழ்த்துக்கள். இதைத் தொடர்ந்து 2 மாத பாரத ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரில் தொடங்கி மும்பையில் முடிவடைந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தற்காப்பு கலை அனைவருக்கும் அவசியம் , மற்றும் அவர் கூறியது உண்மை இந்த கலை உடல் ரீதியாகவும் ,மன ரீதியாகவும் வலிமையை கொடுக்கிறது.. என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.