
பெண்களுக்காக காங்கிரஸ் 5 அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளது..
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நாரி நியாய் உத்தரவாதத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் மானியமாக காங்கிரஸ் அரசு வழங்கும்.
- மேலும், அனைத்து அரசுப் பணியிடங்களிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
- ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி, மதிய உணவு பணியாளர்களின் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்படும்.
- ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- மேலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக சாவித்ரி பாய் ஃபுலே விடுதிகளை நிறுவவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பெண்கள் விடுதிகள் அமைக்கவும், தற்போதைய விடுதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
कांग्रेस पार्टी आज “नारी न्याय” गारंटी की घोषणा करती है, इसके तहत कांग्रेस पार्टी महिलाओं के लिए देश में एक नया एजेंडा सेट करने जा रही है।
नारी न्याय गारंटी के अन्तर्गत कांग्रेस पार्टी 5 घोषणाएँ कर रही है, उसमें,
1️⃣ महालक्ष्मी गारंटीइसके तहत सभी गरीब परिवार की एक महिला को… pic.twitter.com/eVAVFZGMDj
— Mallikarjun Kharge (@kharge) March 13, 2024