நாம் அனைவருக்கும் பிறந்தநாள் என்பது மிகவும் சந்தோஷம் மற்றும் எதிர்பார்ப்புடன் கூடிய நாளாக இருக்கும். அத்தகைய நன்னாளில் கூட பணிக்கு செல்பவர்கள் இங்கு அதிகம்.

ஆனால் அபிஜித் சக்கரபூர்த்தி என்ற நிறுவனர் என் நிறுவனத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு பிறந்தநாள் அன்று விடுமுறை அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். நானும் உங்களை மாதிரி கஷ்டப்பட்டவன் தான். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் பிறந்த நாளுக்கு எனது மேலாளிடம் விடுப்பு கேட்டேன். அதற்கு அவர் பிறந்தநாளுக்கு பரிசு தான் கொடுக்க முடியும் விடுப்பு கொடுக்க முடியாது என்று கூறினார். அது எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. அத்தகைய நான் பட்ட கஷ்டம் எனது ஊழியர்கள் யாரும் படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்