
சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகர் 2-வது தெருவில் வசிப்பவர் மணி (62). இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சினிமா நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35), இவரது வீட்டிற்கு எதிரே வசித்து வருகிறார்.
இவருக்கும் மணி வீட்டாருக்கும் கார் நிறுத்துவதில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மாதவரம் காவல் நிலையத்தில் மணி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நித்யா தனது காரை சேதப்படுத்தியதற்காக கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார் நித்தியாவை கைது செய்து பின் ஜாமீனில் விடுவித்தனர். பின் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.