
சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது 4வது மாடியில் உள்ள சீலிங்கை உடைத்து, கொள்ளையர்கள் உள்ளே குதித்துள்ளனர்.
அதன் பின் அங்கிருந்த கல்லாவில் உள்ள பணத்தை திருடி சென்றனர். 2 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மாம்பலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.